இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: பிரேசில் சுற்றுலாப் பயணி கூட்டு வன்புணர்வு

OruvanOruvan

Spanish Woman Raped During Motorbike Tour Of India With Husband

இந்தியாவில் பிரேசில் சுற்றுலாப் பயணி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்கண்டில் பிரேசில்-ஸ்பானிஷ் இரட்டைக் குடியுரிமை கொண்ட சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டு வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றுலா சென்ற 28 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் டும்கி மாவட்டத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேநேரம், குறித்த பெண் தாக்குதல்தாரர்களால் கூட்டுப் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து அண்டை நாடான நேபாளத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிதாம்பர் சிங் கெர்வார் தெரிவித்தார்.

அவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அந்த பெண் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நால்வர் கைது; மேலும் மூவருக்கு வலை வீச்சு

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் சுற்றுலா பயணியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

OruvanOruvan

3 Arrested In Spanish Woman Gang-Rape Case Brought To Court

ஏழு பேர் என்னை வன்புணர்வு செய்தனர்

சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வருவதற்கு முன்பு தம்பதியினர் தங்கள் மோட்டார் சைக்கிளில் ஆசியாவின் பல பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

வார இறுதியில், குறித்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 234,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர், "ஏழு பேர் என்னை வன்புணர்வு செய்தனர். அவர்கள் எங்களை அடித்து கொள்ளையடித்துள்ளனர்," என்று ஸ்பானிஷ் மொழியில் கூறினார்.

சிக்கலைச் சமாளிக்க கடுமையாக போராடும் இந்தியா

பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகளை தடுப்பதற்கான இந்தியாவின் பல தசாப்த கால போராட்டத்தை எடுத்துக்காட்டும் அண்மைய சம்பவமாக இது அரங்கேறியுள்ளது.

2012 ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான உரையாடல்கள் இந்தியாவில் அதிக முக்கியத்துவம் பெற்றன.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பாலியல் வன்புணர்வுகள் அங்கு பதிவாகியுள்ளன.

மேலும் இந்த சிக்கலைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் போராடி வருகின்றது.