சென்னையில் இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பொலிஸார் விசாரணை ஆரம்பம்

OruvanOruvan

Indian Schools

சென்னை , கோவையில் உள்ள இரண்டு தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை, கோவையில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று இரண்டு பாடசாலைகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.

சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பாடசாலை மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பாடசாலைகளுக்கு நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

குறித்த பாடசாலைகளில் இன்று தேர்வுகள் நடைபெறும் நிலையில், முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியமை குஙிப்பிடத்தக்கது.