ஆனந்த அம்பானி எப்படி உடல் எடையை குறைத்தார்?: காரணமாக இருந்த ஒற்றை நபர்

OruvanOruvan

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை. இருவரது ஜுலை 12ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளார்.

2,500 உணவுகள் பரிமாறப்படும்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டம் இன்றும், நாளையும், நாளைமறுதினமும் ஜாம்நகரில் நெடைபெறுகிறது.

விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

OruvanOruvan

ஆசியாவின் பெரும் கோடீஷ்வரர் வீட்டு திருமண கொண்டாட்டம் என்பதால், ஒவ்வொரு நாளும் இது குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பிரபலங்கள் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள்.

இந்த கொண்டாட்டங்களின் போது விருந்தினர்களுக்கு ஒரே நேரத்தில் 2,500 உணவுகள் பரிமாறப்படும்.

ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், சல்மான் கான், ஜான்வி கபூர் உட்பட பல பிரபலங்கள் கொண்டாட்டங்களின் பங்கேற்கின்றனர். பாப் நட்சத்திரம் ரிஹானாவும் கலந்து கொள்கிறார்.

108 கிலோவை எப்படி குறைத்தார்

ஆனந்த் அம்பானி இந்தியாவின் முதல்தர பணக்கார குடும்பத்தின் வாரிசாக இருந்தாலும் உடல் எடை அதிகரிப்பு இவரை நீண்டகாலமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அவரது எடை குறைப்பு பயணம் மிகவும் சவால்மிக்கதாக இருந்தது.

ஆனந்த் அம்பானி 18 மாதங்களில் 108 கிலோவை குறைத்துள்ளார்.

OruvanOruvan

2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு நீதா அம்பானி அளித்த பேட்டியின்படி, ஆனந்த் அம்பானி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் நிறைய ஸ்டீராய்டுகளை உட்கொள்ள வேண்டியிருந்தது.

ஆஸ்துமா மருந்து குறிப்பிடத்தக்க எடை அதிகரிப்பை ஏற்படுத்தியதால், ஆனந்த் உடல் பருமனால் அவதிப்பட்டதை அவர் வெளிப்படுத்தினார்.

அவர் கடந்த காலத்தில் சுமார் 208 கிலோ எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அனந்த் அம்பானியின் உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் சன்னா, 18 மாதங்களில் 108 கிலோவுக்கு மேல் எடையைக் குறைக்க உதவியுள்ளார்.

ஆனந்த் உடற்பயிற்சி சாதனையை எவ்வாறு அடைந்தார் என்பதை வினோத் சன்னா, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

21 கி.மீ நடந்தார்

அவர் ஆனந்த் அம்பானிக்கு ஒரு தனி உணவுத் திட்டத்தை வகுத்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 1,200-1,5000 கலோரிகளை உட்கொள்ளும் நிலையான உணவுத் திட்டமாக இது இருந்துள்ளது.

குறைந்த கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்வது இத்திட்டம்.

யோகா, வலிமை பயிற்சி, நெகிழ்வுத்தன்மை பயிற்சிகள் மற்றும் கார்டியோ உள்ளிட்ட கடுமையான உடற்பயிற்சிகளையும் ஆனந்த்துக்கு அளித்துள்ளார்.

ஆனந்த் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை தினமும் உடற்பயிற்சி செய்துள்ளார்.

மெலிந்த தசைகளை உருவாக்குதல், கலோரிகளை எரித்தல் மற்றும் ஒட்டுமொத்த உடற்தகுதியை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் ஆனந்த் ஈடுபட்டுள்ளார்.

தினமும் சுமார் 21 கி.மீ தூரம் நடை பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.

இந்தத் திட்டம்தான் ஆனந்த் அதானிக்கு 108 கிலோ எடையை குறைக்க உதவியுள்ளதாக அவரது பயிற்சியாளர் தெரிவிக்கிறார்.