துரித உணவுகளின் தரம் குறித்து ஆய்வு: மகாராஷ்ரா மாநிலம் தீர்மானம்

OruvanOruvan

Fast foods

வெளிநாட்டு துரித உணவு விற்பனை நிலையங்களின் தரம் குறித்து ஆராய்வு நடத்தவுள்ளதாக இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்ரா தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் பால் உற்பத்திப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேலும் வெண்ணை மற்றும் ஏனைய பொருட்களின் தரம் குறித்து நுகவோர் தரப்பில் பரவலான முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு இடம்பெறவுள்ளதாக மாநில உணவு கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பணவீக்கம் காரணமாக துரித உணவு விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டதன் காரணமாக நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இத்தகைய ஆய்வு நடவடிக்கைகள் மேலும் தமது உற்பத்திகளின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.