கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழகத்தில் அறிவிப்பு: தொடரும் போராட்டத்தின் எதிரொளி

OruvanOruvan

யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தில் தொடரும் மீனவ போராட்டங்களை அடுத்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பத்தாக உத்தியோகப்பூர்வமாக இராமநாதபுரம் கச்சத்தீவு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்தியகோ தெரிவித்துள்ளார்.

தொடரும் மீனவ பிரச்சினைகளையடுத்து இராமேஸ்வர மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் கச்சத்தீவு திருவிழாவிற்கு பயணிகளை அழைத்துச் செல்ல முடியாது.

எனவே கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையிலுள்ள மூன்று மீனவர்களை உடன் விடுவிக்கவேண்டும் தெரிவித்து இராமேஸ்வர மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் மூன்று நாள் தொடர் நடை பயணத்தைனை நேற்றையதினம் ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நடை பயணம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட நிலையில் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டம் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan