பேருந்தில் காலணியால் தாக்கிக்கொண்ட பெண்கள்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி

OruvanOruvan

Women hit each other with shoes X

பொது பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொண்ட சம்பவம் இந்தியாவின் பெங்களூருவில் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு பெண்களும் தம்மை காலணிகளால் தாக்கிக்கொள்கின்றனர்.

ஒரு பெண் மற்றைய பெண்ணிடம் பேருந்து ஜன்னலை மூடுமாறு கோரியதை அடுத்து இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

இரண்டு பெண்களும் தூஷண வார்த்தைகளால் திட்டிக்கொண்டு காலணிகளால் தாக்கிக்கொள்வதை பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.