மக்களவைத் தேர்தலில் வெற்றி யாருக்கு?: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

OruvanOruvan

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும் என இந்தியா டுடே தனது தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்தியா டுடே கருத்து கணிப்பில் மேலும் கூறியிருப்பதாவது,

“2023 டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி வரை சுமார் 35 ஆயிரம் பேரிடம் குறித்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே கைப்பற்றி மகத்தான வெற்றி பெறும். அதுபோல, கேரளத்திலும் 20 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே பிடிக்கும்.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 24 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 4 தொகுதிகளிலும் வெல்லும்.

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கூட்டணியே கைப்பற்றும், தெலுங்கானாவில் இந்தியா கூட்டணி 9 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 5 தொகுதிகளையும் கைப்பற்றும்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 18 தொகுதிகளையும் கைப்பற்றும்.

பிகாரில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளை வெல்லும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 8 தொகுதிகளைக் கைப்பற்றும்.

2019ஆம் ஆண்டைக் காட்டிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளை வென்று சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 இல் 62 தொகுதிகளை வென்றிருந்தது.இந்த கணிப்புகள் எல்லாம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்தான் என்றும், இவை மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.