டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

OruvanOruvan

Thick fog shrouds Delhi

டெல்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று காலை கடும் பனி சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானம் மற்றும் இரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 1.30 முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனி காரணமாக 5 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 108 விமானங்கள் தாமதமாக தரை இறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு பயணிகள் பயண சீட்டுகளை பதிவு செய்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மேற்குத்தொடர்ச்சி காரணமாக டெல்லியில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.