இந்திய கடற்படையின் அதிரடி நடவடிக்கை: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 19 பாகிஸ்தானியர்கள் மீட்பு

OruvanOruvan

The Indian navy posted a photo of its personnel with the captured hijackers

சோமாலிய கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீன்பிடி படகில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா 36 மணி நேரத்தில் மேற்கொண்ட இரண்டாவது மீட்பு நடவடிக்கை இதுவாகும்.

அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரண்டு ஈரானிய மீன்பிடி கப்பல்களை இந்திய கடற்படை ஒரே நாளில் மீட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஎன்எஸ் சுமித்ரா ரோந்துக் கப்பல் முன்னதாக திங்கள்கிழமை (29)அதிகாலை ஒரு படகில் இருந்த 17 ஈரானிய பணியாளர்களை மீட்டது.

இந் நிலையில் 19 பாகிஸ்தானியர்களை இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் முதல் இந்தியப் பெருங்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் மீள் எழுச்சிக்கு இந்திய கடற்படை பதலளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.