சீனாவைக் கண்டு இந்தியா பயப்படாது: இந்தியா பொறுப்பான நாடாக இருக்க விரும்புகிறது

OruvanOruvan

சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ங்கர் தெரிவித்தார்.

”சீனா அண்டை நாடாகும். சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார நாடாகும்.

இந்தியாவில் இரண்டு பிரச்னைகள் நிலவுகிறது. கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்து வருகிறது. இதற்காக, வணிக பாதையில் இந்திய கடற்படை இன்று பத்து கப்பல்களை நிறுத்தி உள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய மீனவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து நம் கடற்படையினர் மீட்டனர். இது இந்தியாவின் திறமை. நமது செல்வாக்கு என இன்று உணர்கிறேன்.

கடினமான சூழ்நிலைகளில் கூட, நாம் உண்மையில் உதவ வேண்டும். நம் சுற்றுப்புறத்தில் மோசமான விஷயங்கள் நடந்தால் பொறுப்பான நாடாக கருதப்பட மாட்டோம்.” இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.