பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கு: 15 பேருக்கு மரண தண்டனை உத்தரவு

OruvanOruvan

Ranjith Sreenivasan

2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு இந்திய நீதிமன்மறம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவின் மாவேலிக்கரை மேதலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் குழாம் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவினை பிறப்பித்தது.

குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் இப்போது தடைசெய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) உடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கேரள பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார்.

கடந்த 2021, டிசம்பர் 19 ஆம் திகதியன்று கேரளாவின் ஆலப்புழாவின் வெல்லக்கிணறு பகுதியில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.