மீண்டும் தமிழகத்தில் மோடி: பிரசாரத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

OruvanOruvan

India Prime minister Narendhira Modi

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் பெப்ரவரியில் தமிழகம் வருவதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை திருப்பூரில் தொடங்கி வைக்கவுள்ளார்.

பிரதமர் மோடி இரு மாதங்களில் மூன்றாவது முறையாக பெப்ரவரி 18 ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தர உள்ளார் என பா.ஜனதா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்'என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து யாத்திரை தொடங்கினார்.

இந்நிலையில் 100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையின் நிறைவில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடாத்த ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பொதுக்கூட்டத்தில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் இடம்பெற்றதுடன், அடுத்த மாத இறுதியில் மோடி தமிழகத்தில் பிரசாரத்தை ஆரம்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் இந்த வருகை பா.ஜனதா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.