சங்கி என்பது கெட்டவார்த்தையா?: பட விளம்பரத்திற்காக பேசவில்லை : ரஜினி அளித்துள்ள விளக்கம்

OruvanOruvan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த,

“எனது அப்பாவை சமூக வலைதளங்களில் சங்கி சங்கி என அழைக்கின்றனர். அப்பாவை சங்கினு சொல்லும்போது கோபம் வரும். அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். ரஜினிகாந்த் ஒரு சங்கி கிடையாது. மனிதநேயமிக்க ஒருவர்தான் இதில் நடிக்க முடியும்.” என கோபமாக பேசினார்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், ‘‘சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை.

அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்ப கூடியவர் என்றுதான் ஐஸ்வர்யா கூறினார். பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு. படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.‘‘ என்றார்.