இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொடர்பு: தற்கொலை செய்துக்கொண்ட பாடசாலை மாணவி

OruvanOruvan

Social Media

இந்தியாவின் கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் நூல்புழா பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 9ம் வகுப்பில் பயின்று வந்த அலினா பென்னி என்ற மாணவி உயிரிழக்க காரணமாக இருந்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆலப்புழா, கனிச்சுகுளங்கரைச் சேர்ந்த 20 வயதான ஆதித்யன் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக நூல்புழா பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சிறுமியும், ஆதித்யனும் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்து வந்துள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அலினா பென்னி என்ற மாணவி கடந்த 20 ஆம் திகதி தனது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். சைபர் ஆய்லாளர்களின் உதவியுடன் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பரிசோதித்த போது தற்கொலை குறித்த மேலதிக விபரங்கள் தெரியவந்துள்ளன.

ஆதித்யன் எர்ணாகுளத்தில் உள்ள அவரது பணியிடத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் அரட்டை மூலம் அந்த மாணவியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

பின்னர், ஆதித்யனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தபோது, ​​இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.