மும்பையில் பாரிய தீ விபத்து ; ஒருவர் பலி: தீயணைப்பு நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள்

OruvanOruvan

Fire at Mumbai timber market

இந்தியா - மும்பையில் அமைந்துள்ள மரச்சந்தை ஒன்றில் இன்று அதிகாலை பாரியளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.