ஏன் அயோத்தி ராமர் கோவிலில் கல்லைத் தவிர, இரும்பு, உருக்கு என்று எதுவும் பயன்படுத்தவில்லை தெரியுமா?: தெரிந்தால் வியந்து போவீர்கள்

OruvanOruvan

Ramar Kovil

அயோத்தி ராமர் கோயில் நம் இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.

இந்த கோயிலின் கட்டுமானப் பணி தனித்துவம் வாய்ந்தது. இந்த கோயிலில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த கோயில் முழுக்க முழுக்க கற்களால் ஆனது. அந்தக் காலத்தைப் போன்று இந்த கோயிலை கற்களால் செதுக்கி உள்ளனர்.

முக்கியமாக இந்த கோயில் எஃகு மற்றும் இரும்பு போன்ற உலோகங்களால் வடிவமைக்கப்படவில்லை. இங்கு ராமர் குழந்தை வடிவில் தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ராம் லல்லா என்று அழைக்கப்படும் குழந்தை ராமர் சிலை பல தசாப்தங்களாக ஒரு சிறிய கூடாரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது அந்த சிலையை வைப்பதற்காக அயோத்தி ராமர் கோயிலை பிரம்மாண்டமாக கட்டியுள்ளனர்.

தனித்துவமான கட்டடக்கலை ராமர் கோயில் தனித்துவமான கல்லை பயன்படுத்தி கட்டப்பட்டு உள்ளது. ராமர் கோயிலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கல்லிலும் பள்ளம் வெட்டப்பட்டு பிறகு அந்த பள்ளத்தில் மற்ற கற்களை போட்டு கட்டியுள்ளனர். கற்கள் ஒவ்வொன்றும் இணக்கமான முறையில் இணைக்கப்பட்டு உள்ளன. எந்த கற்களுக்கு இடையிலும் சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை.

ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து வருகிறது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தை கொடுக்க கூடியது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மேலும் பல விஷயங்களை கூறியுள்ளார். அஸ்திவாரத்திற்கான மண் பரிசோதனை தொடங்கிய போது, ​​கோயிலுக்கு அடியில் மண்ணுக்குப் பதிலாக முற்றிலும் தளர்வான மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

OruvanOruvan

இந்த தளர்வான மணல் முற்றிலும் அடித்தளத்திற்கு பொருத்தமற்றது. பிறகு இதை மேலும் ஆராய ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இதைத் தொடர்ந்து இந்த சிக்கலைப் தீர்ப்பதற்காக சிபிஆர்ஐ, தேசிய புவி இயற்பியல் ஆய்வு, ஐஐடி டெல்லி, குவாஹாத்தி, சென்னை, ரூர்க்கி மற்றும் பாம்பே மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) ஆகியவற்றின் நிபுணர்கள் நியமிக்கப்பட்டு இது குறித்து ஆராய்ச்சி செய்தனர்.

பிறகு அயோத்தி ராமர் கோயிலில் 6 ஏக்கர் நிலத்தில் இருந்து 14 மீட்டர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டது. அதன் பிறகு அஸ்திவாரத்தை வலிமையாக போடுவதற்காக அதற்கான பாறைகளை தயார் செய்ய காலி இடத்தில் ரோல்டு காம்பாக்ட் கான்கிரீட் எனப்படும் தனித்துவமான கான்கிரீட் 56 அடுக்குகளில் போடப்பட்டது. இது ஒரு வகையான கான்கிரீட்டாக இருந்தால் கூட இறுதியில் பாறையாக மாறக் கூடியது.

பிறகு இந்த வலிமையான கான்கிரீட் பாறையே அஸ்திவாரமாக போடப்பட்டது. நாகரா பாணி ஸ்டைல் ராமர் கோயில் நாகரா பாணி ஸ்டைலில் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாணி ஸ்டைலில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. வட இந்தியாவில் பொதுவாக மூன்று கட்டிடக்கலை பாணிகள் பின்பற்றப்படுகின்றன. மூன்று கட்டிடக்கலை பாணிகளில் ஒன்று தான் இந்த நாகரா பாணி பாணியாகும். இந்த நாகர் பாணியில் கட்டப்பட்டுள்ள மற்ற கோயில்கள் கஜுராஹோ கோயில், சோம்நாத் கோயில் மற்றும் கோனார்க்கின் சூரியன் கோயில் ஆகியவை ஆகும்.

ராம் லல்லாவின் சிலை ஷாலிகிராம் கல்லால் ஆனது ராம் லல்லாவின் சிலையை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களை செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ராம் லல்லா 5 வயது குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.


(நன்றி : இந்திய ஊடகம்)