அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ராமர் சிலையின் முழு காணொளி

OruvanOruvan

பிரதிஷ்டை செய்யப்பட்ட முழு ராமர் சிலை காணொளியில்...

திறக்கப்பட்ட ராமர் சிலை

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. (சிலை திறக்கப்பட்டது)

இதன்போது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோதி ஆதித்யநாத் ஆகியோர் மலர்தூவி வழிபாடு செய்தனர்.

OruvanOruvan

ஆரம்பமான பிரதிஷ்டை விழா

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி பங்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

OruvanOruvan

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி வந்தடைந்தார்

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி வந்தடைந்தார்.

OruvanOruvan

Ram Mandir Ayodhya Live Update

அயோத்தியில் நடிகர் ரஜினிகாந்த்

அயோத்தியில் சச்சின் டெண்டுல்கர்

அயோத்தி ராமர் கோவில் நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.

பெருமகிழ்ச்சி அடைகிறோம் ; நடிகர் சிரஞ்சீவி மகிழ்ச்சி

கடவுள் எங்களுக்கு இந்த நல்வாய்ப்பை கொடுத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வந்ததற்கு பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில், கும்பாபிஷேக விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குவியும் பக்தர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தி நகரில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.