அயோத்தி இராமர் கோவில் திறக்கப்பட்டது: கிறிஸ்தவ தேவாலயத்தை ஆக்கிரமித்த காவிக்கொடி

OruvanOruvan

அயோத்தியில் இராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்வை வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயத்தில் காவிக்கொடி நடப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அயோத்தில் இராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காணொளி மத பிரச்சினைகள் ஏற்படவும் இன முறுகலையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.

இராமர் கோவில் அமைந்துள்ள பகுதியில் முன்னதாக மசூதி ஒன்று இருந்தது. இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல்கள் இடம்பெற்று வந்தன.

இந்தியா முழுவதும் இடம்பெற்ற போராட்டங்களுக்கு பின்னர் குறித்த பகுதியில் இருந்த மசூதி 1992 இல் இடித்து கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் அங்கு ஒரு சிறு கோவிலை நிறுவினர்.

இதனையடுத்து நாடு முழுவதும் கலவரங்கள் மூண்டன. குறித்த பகுதியில் பாபர் மசூதி இருந்ததாக தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டன.

குறித்த வழக்கிற்கான தீர்ப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதுடன், அயோத்தி தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைகள் வெடிக்கும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

இராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள பின்னணியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் சிலுவைக்கு மேலாக காவிகொடி நடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கிறிஸ்தவர்கள் எதிர்வினையோடு செயற்படுவார்களினால் மீண்டும் இன முரண்பாடுகள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.