திருப்பதி லட்டின் சுவை குறைய வாய்ப்பே இல்லை: தரமான பொருட்களை கொண்டே லட்டு தயாரிக்கப்படுகிறது.

OruvanOruvan

Tirupathi Laddu

திருப்பதியில் லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து விட்டதாகவும், சுவை மற்றும் அளவு முன்பைப் போல் இல்லையெனவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அளித்துள்ள விளக்கத்தில், “சுமார் 5 ஆயிரம் லட்டு தயாரிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தான் இன்று வரை கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய், நெய், முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்றவை சேர்க்கப்பட்டு, லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.

OruvanOruvan

Tirupathi Laddu

இதில் எடையும் கூட குறைய வாய்ப்பில்லை.

அதே போல லட்டின் சுவையும், தரமும் குறையவும் வாய்ப்பு கிடையாது.

எல்லாமே தரமான பொருட்களே பயன்படுத்தப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் பார்முலாவின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து லட்டு தயாரிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.