2024 குரோதி தமிழ் புத்தாண்டு! குறி வைத்த குருவால் காத்திருக்கும் ராஜயோகம்: யார் யாருக்கு அதிர்ஷ்டம்

OruvanOruvan

2024 Guru peyarchi pariharangal

குரோதி தமிழ் புத்தாண்டில் முதல் கிரகப்பெயர்ச்சியாக குரு பெயர்ச்சி நிகழப்போகிறது.

குரு பகவான் மே மாதம் 1ஆம் திகதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

இதனால் எந்த ராசிக்கு நல்ல காலம் பிறக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது.

ரிஷபம்

ஜென்ம ராசிக்கு குரு வருவதால் குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு மே மாதம் முதல் சம்பள உயர்வு அல்லது நல்ல இடமாற்றம் ஏற்படும் யோகம் உள்ளது.

மிதுனம்

குரு பகவான் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கொடுப்பார். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பண விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடகம்

குரு பெயர்ச்சியால் வெற்றி மீது வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும்.

கன்னி

குருவின் பார்வையால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பொன்னான பார்வையால் வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக தேவை.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் தொட்டது துலங்கும். வியாபாரம், தொழிலில் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சொந்த தொழில் தொடங்குவீர்கள். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

மகரம்

குரு பகவானால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வீடு மாற்றம், வேலையில் இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது.

கும்பம்

தொழில் ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் வேலையில் புதிய உற்சாகம் பிறகும். புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்

குரு பகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உடலில் இருந்த நோய்கள் நீங்கும். எனினும், பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. திடீர் வேலை மாற்றம் உங்களின் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.