சிவராத்திரியுடன் இணைந்து வரும் பிரதோஷ விரதம்!: பலன்கள் என்ன?

OruvanOruvan

Maha Shivarathiri 2024

மகா சிவராத்திரியானது, மார்ச் 08ஆம் திகதி வருகிறது.

சிவராத்திரியானது, கிருஷ்ண பக்ஷ்த்தின் சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது.

இந்த தடவை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காரணம் என்னவென்றால், இந்த நாளில் சுக்ர பிரதோஷ விரதம் தற்செயலாக வருகிறது. இந்த பிரதோஷ விரதம் தவிர பல அரிய யோகங்களும் இந்நாளில் உருவாகிறது.

இவ்வாறிருக்க இத்தகைய சூழ்நிலையில் இந்த தடவை மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால், நாம் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

சரி இனி மகா சிவராத்திரியன்று உருவாகும் அனைத்து யோகங்களைப் பற்றியும் பார்ப்போம்.

OruvanOruvan

Maha Shivarathiri 2024

மகா சிவராத்திரி

இந்த மகா சிவராத்திரியில் சிவயோகம், சித்தயோகம், சதுர்கிரஹி யோகம் போன்ற யோகங்கள் நடக்கின்றன.

மேலும் இந்த நாளில் கும்பத்தில் மூல திரிகோணத்தில் சனி அமர்ந்திருப்பதுடன் சூரியன், சந்திரன், சுக்கிரனும் உள்ளனர்.

இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

மகா சிவராத்திரியில் சுக்ரபிரதோஷ விரதம்

இந்த வருடமானது, மகா சிவராத்திரி மற்றும் சுக்ர பிரதோஷ விரதம் இரண்டும் ஒன்றாக வருகிறது. எனவே இந்த விரதமானது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

வாழ்க்கையில் எல்லா குறைகளையும் நீக்கி விடும்.

விரதத்தின் முக்கியத்துவம்

சுக்ர பிரதோஷ விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் எதிரிகள் அழிக்கப்படுதோடு, மகாதேவனின் அருளும் எப்போதும் இருக்கும். அதோடு அழகு, ஆடம்பரம், செல்வம் என்பவை பெருகும்.

OruvanOruvan

Shivarathiri 2024