காதலர் தினத்துக்குப் பின்னர் இந்த 5 ராசியினருக்கும் திருமணம் கைகூடும்: உங்க ராசி எது?

OruvanOruvan

Astrology

காதலிப்பவர்களின் ஒரே விருப்பம் என்னவென்றால், அவர்களது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டு காதலர் தினத்துக்குப் பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கப்போகிறதென பார்ப்போம்.

மிதுனம்

OruvanOruvan

Gemini

பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்த காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு வியாழனின் ஆசிர்வாதம் கிடைக்கும். இதனால் அவர்கள் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளலாம்.

நீண்ட நாட்களாக உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்காவிட்டால், அந்த திட்டமிடலை ஆரம்பிக்க இதுவே சிறந்த தருணம். திருமணம் நடக்கும் வாய்ப்புகள் வலுவாக இருக்கும்.

சிம்மம்

OruvanOruvan

Leo

காதலர் தினத்துக்குப் பின்னர் நீங்கள் உங்கள் திருமணத் திகதியை திட்டமிடுகிறீர்கள் என்றால், அது வெற்றியில் முடியும். சிம்ம ராசியைப் பொறுத்தவரையில் இந்த வருடம் திருமணம் கைகூடுவதற்கான அனைத்து வாய்ப்புக்களும் உள்ளன. காதல் திருமணம் நடைபெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

துலாம்

OruvanOruvan

Libra

இந்த ஆண்டு சரியான வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிங்கிளாக இருப்பவர்களுக்கும் காதல் உறவில் இருப்பவர்களுக்கும் இந்த ஆண்டின் முதல் பாதி சாதகமானது.

நீங்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்குவதில் வெற்றியடைவீர்கள்.

விருச்சிகம்

OruvanOruvan

Scorpio

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 5ஆம் வீட்டில் ராகு உங்கள் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். மே மாதத்திலிருந்து வருடத்தின் இறுதி வரையில் திருமணத்திற்கான நேரம் பிரகாசமாக இருக்கும். விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெற்றுக்கொள்வீர்கள்.

மகரம்

OruvanOruvan

Capricorn

இந்த ஆண்டானது மகர ராசியினருக்கு திருமணத்துக்கு ஏற்ற ஆண்டு. அதனால் சிங்கிளாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையைப் பெறுவதற்கு காதலர் தினத்துக்கு பிறகு மார்ச் முதல் ஏப்ரல் மற்றும் மே - ஜூன் வரையிலான காலம் சாதகமாக உள்ளது.