உங்க வீட்ல இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மரணம் நிகழலாம்: ஜாக்கிரதையாக இருங்கள்

OruvanOruvan

Death symptoms

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் நிச்சயம் ஒருநாள் மரணம் உண்டு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலுமே மரணம் பற்றிய பயம் இல்லாதவர்கள் இருக்க முடியாது. மரணம் குறித்து ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் உள்ளன.

மரணத்தை யாராலும் தடுக்கவும் முடியாது அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. ஆனால், ஒருவருக்கு மரணம் ஏற்படப்போவதை சில அறிகுறிகள் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

அவற்றைக் குறித்து பார்ப்போம்.

கறுப்பு பூனை

OruvanOruvan

Black cat

நள்ளிரவு நேரத்தில் கறுப்பு பூனை வீட்டுக்குள் அடிக்கடி உலாவுதல், அல்லது வீட்டில் யாரேனும் சுகயீனமுற்றிருந்தால் அவர்களது படுக்கையில் வந்து அமர்ந்து கொள்ளுதல் போன்றன மரணத்துக்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமன்றி இறுதி ஊர்வலம் நடக்கும்போது கறுப்பு பூனை குறுக்காக சென்றால் குடும்பத்தில் யாரோ ஒருவர் மூன்று நாட்களுக்குள் இறப்பார் என்று அர்த்தமாம்.

நாய் ஊளையிடுதல்

OruvanOruvan

Dog

பொதுவாகவே நாய்களுக்கு வீட்டில் நடக்கக்கூடிய துர்சம்பவங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சக்தி உண்டு. அந்த வகையில் நாய்கள் வீட்டின் ஜன்னல் அருகில் தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டே இருந்தால் அது வீட்டில் மரணம் ஏற்படப் போவதற்கான அறிகுறியாம்.

வீட்டில் நோயுற்றவர் இருப்பாரெனில், நாய் ஊளையிடுதல், தரையில் பள்ளம் பறித்தல், தலையைக் குனிந்தபடி ஊளையிடுதல் போன்றன மரணத்தின் அறிகுறிகள்.

பறவைகள்

OruvanOruvan

Pigeon

புறா, காகம், வெள்ளை நிறப் பறவை இப்படி ஏதாவது ஒரு பறவை வீட்டில் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவரின் படுக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தாலோ அல்லது அவர் இருக்கும் அறையின் ஜன்னலுக்கு அருகில் அடிக்கடி பறந்துகொண்டிருந்தாலோ அது மரணத்தின் அறிகுறியாகும்.

ஆந்தை

OruvanOruvan

Owl

பகல் நேரங்களில் ஆந்தையைப் பார்த்தாலோ அல்லது தலையின் வலது புறமாக வந்து கூச்சலிட்டாலோ உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாரோ மரணிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.

ஒற்றைக் காகம்

OruvanOruvan

Crow

ஒற்றைக் காகம் அல்லது ஆறு காகங்கள் அடிக்கடி கண்களில் பட்டால் அது மரணத்துக்கான அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, வௌவால் வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் பறந்து செல்வதும் மரணத்துக்கான அறிகுறியாகும்.

மரணத்தைக் குறிக்கும் கனவுகள்

OruvanOruvan

Dream

பல் விழுதல், வெள்ளைக் குதிரை, அன்னப்பறவை, ஒன்றுக்கு மேற்பட்ட நிலவுகள், கலங்களான நீரில் நடந்து செல்வது போல் கனவு காணுதல் என்பன மரணத்தை நெருங்குவதற்கான அறிகுறிகள்.

தனியாகப் பேசுதல்

OruvanOruvan

Talking alone

யாரும் இல்லாத அறையில் ஒருவர் யாரோ ஒருவருடன் பேசுகிறார் என்றால் அந்த குறிப்பிட்ட நபர் விரைவில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

மூதாதையருடன் பேசுதல்

OruvanOruvan

Talking to Ancestors

ஒரு சிலர் இறந்துபோன மூதாதையரின் ஆன்மா தன்னுடன் வந்து பேசுவதாக கூறுவார்கள். இது குறித்த அந்த நபரின் உயிர் பிரிவதற்கு முன்னர் முன்னோர்களால் அவர் வழிநடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மகிழ்ச்சியான தருணம்

OruvanOruvan

spending time with family

அநேக நாட்களாக படுத்த படுக்கையாக இருந்த நபர், திடீரென தனது சொந்தபந்தங்கள், நண்பர்களுடன் பேசி, மகிழ்ச்சியாக இருக்க நினைத்தால் அது மரணத்தின் அறிகுறி.