திட்டம் தீட்டுவதில் கில்லாடிகள்: உங்க பெயர் 'M' எழுத்தில் ஆரம்பிக்குதா?

OruvanOruvan

'M' Letter

பொதுவாகவே ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்குப் பின்னாலும் ஒரு அர்த்தம் உண்டு. அந்த வகையில் 'M' எழுத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் பற்றி பார்ப்போம்.

இயற்கையாகவே அறிவுத்திறனுடைய இவர்கள், அனைவருக்கும் உதவும் வகையில் திட்டங்களை தீட்டி அதனை செயற்படுத்த முனைவார்கள்.

தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள். சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்.

OruvanOruvan

'M' Letter

தன்னை சுற்றியிருக்கும் நேர்மறை எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும் தன்மை இவர்களிடம் உண்டு. எதிலும் நடுநிலையாக நடந்து கொள்வார்கள்.

இயற்கையிலேயே ஆரோக்கியமான உடல் வலிமை மற்றும் மன வலிமை கொண்டவர்கள்.

ஒரு நட்பையோ அல்லது தொழிலையோ தேர்ந்தெடுக்கும்போது அதை நீண்ட நாட்களுக்கு தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.

OruvanOruvan

'M' Letter

இவர்களது பலம்

 • சமூதாயத்தின் மீது அக்கறையுள்ளவர்கள்.

 • சுயநலமற்றவர்கள்.

 • பாரம்பரியத்தை கட்டிக் காப்பார்கள்.

 • திட்டமிடுதலில் கில்லாடிகள்.

 • அறிவுத்திறன் அதிகம் உண்டு.

 • தலைமைப்பண்பு இவர்களிடம் அதிகமாகவே உள்ளது.

பலவீனம்

 • இவர்களுக்கு எதிராக யாராவது செயற்பட்டால் கோபப்படுவார்கள்.

 • எல்லா இடத்திலும் நடைமுறைக்கு பொருந்தும் வகையில் சிந்தித்து, முக்கிய விடயங்களை தவறவிட்டு விடுவார்கள்.

 • இவர்கள் அதிகமாக பொறுமை காப்பதால் மற்றவர்கள் பார்வையில் பிடிவாதக்காரராகவும் சோம்பேறிகளாகவும் தெரிவார்கள்.

 • குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

 • சில சமயங்களில் நன்மை, தீமை கண்களுக்குத் தெரியாது.

OruvanOruvan

'M' Letter

எண் கணிதத்தின் அடிப்படையில் 'M' எழுத்தானது, 4ஆம் எண்ணைக் குறிக்கிறது. 4ஆம் எண் ராகுவைக் குறிக்கும். எனவே அதற்குரிய நம்பகத்தன்மை, விசுவாசம், பக்தி என்பவை இவர்களிடம் அதிகமாகவே காணப்படும்.