மூங்கில் செடியை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?: வாஸ்து கூறுவது என்ன
நமது வீட்டில் அதிர்ஷ்டம் மென்மேலும் பெருகவேண்டும் என்றால், அதற்கு ஒரு சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நன்மை தரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் மூங்கில் செடியை வீட்டில் வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் உண்டாகும் எனப் பார்ப்போம்.
மூங்கில் என்பது கார்பன்டை ஒக்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை உருவாக்கும் திறன் கொண்டது. எனவே இதனை வீட்டுக்குள் வைப்பதன் மூலம் சுவாசிக்க சுத்தமான காற்றைப் பெறலாம்.
மூங்கிலை வீட்டு அலங்காரத்துக்காகவும் வைக்கலாம். புல் வகையைச் சேர்ந்த மூங்கிலை பார்க்க பசுமையாக இருப்பதால் மனதுக்குள் ஒருவித இனிமையை சேர்க்கும்.
மூங்கில் செடியானது மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனால் இதனை வீட்டுக்குள் வைப்பதன் மூலம் வீட்டிலுள்ள காற்றை சுத்திகரித்து கிருமிநாசினியாக பயன்படும்.
மூங்கில் செடிகள் செல்வத்துக்கு பெயர் போனவை. இதனால் 4 தண்டுகள் உள்ள மூங்கில் செடியை வீட்டுக்குள் வைப்பதன் மூலம் அது வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டியடித்து நல்ல செல்வத்தை பெற வழிசமைக்கும்.
மூங்கிலை வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது இன்னும் சிறப்பானது.