'K' எழுத்தில் பெயர் தொடங்குதா?: கற்பனை உலகில் மிதப்பீர்களாமே

OruvanOruvan

'K' Letter

ஒரு நபரின் முதலெழுத்து அவரது பண்புகள் மற்றும் தனித்தன்மையை வெளிக்காட்டுவதாக அமையும். அந்த வகையில் 'K' எழுத்தில் பெயர் அமைந்தவர்களின் பொதுவான குணங்கள் பற்றி பார்ப்போம்.

'K'யை முதலெழுத்தாகக் கொண்டவர்கள், வெளிப்படையாக பேசும் நபர்களாக இருப்பதோடு அவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம்.

கலை, இசை போன்றவற்றில் அதிக ஈர்ப்புடையவர்கள்.

OruvanOruvan

'K' Letter

புதுமையாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும் இருப்பார்கள். உடலை நன்றாக பராமரித்துக் கொள்வார்கள். மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

கடின உழைப்பாளிகள், இலக்குகளை அடைய பெரும்பாடு படுவார்கள். தலைமைத்துவ பண்பு கொண்டவர்கள். மற்றவர்களை ஊக்குவிப்பார்கள்.

மற்றவர்கள் தம்மை அவமரியாதை செய்யக்கூடாது என்று நினைப்பார்கள். மற்றவர்களுக்கு அன்பை திணிப்பார்கள்.

OruvanOruvan

'K' Letter

இவர்களது பலம்

  • கற்பனை சக்தி அதிகம்.

  • மனதிடம் அதிகம் இருக்கும்.

  • தெளிவான சிந்தனை இவர்களிடம் உண்டு.

  • கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

  • தெளிவான சிந்தனை இவர்களிடம் இருக்கும்.

  • நன்றாக சம்பாதிக்கும் திறன் இவர்களிடம் உண்டு.

பலவீனம்

  • தாழ்மையாக பேசும் பழக்கம் இவர்களிடம் இருக்காது.

  • கற்பனை உலகில் மிதப்பார்கள்.

  • சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

  • நடந்ததை நினைத்துக்கொண்டே இருக்கும் பழக்கும் இவர்களுக்கு உண்டு.

  • சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அடம்பிடிப்பார்கள்.

  • வளைந்து கொடுக்கும் தன்மை இவர்களிடம் இல்லை.

OruvanOruvan

'K' Letter

எண் கணிதத்தின் அடிப்படையில் 'K'எனும் எழுத்து எண் 2ஐக் குறிக்கும். எண் இரண்டு என்பது சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் வரும். எனவே அதனடிப்படையில் படைப்புத்திறன், கற்பனை வளம், எழுத்து, முயற்சி, தெளிவான சிந்தனை என்பவற்றை கொண்டிருப்பர்.