கிழக்கு பார்த்த ஜன்னல் வைத்த வீட்டின் நன்மைகள்: வாஸ்து கூறுவது என்ன?

OruvanOruvan

Window vastu tips

ஒரு வீட்டைக் கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்ட வேண்டும் என்பது எமது முன்னோர்கள் எமக்கு கூறிய அறிவுரைகளுள் ஒன்று.

ஒரே வீட்டில் வெவ்வேறு ராசி, நட்சத்திரம் கொண்ட அங்கத்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் வாஸ்து அமைப்பது முக்கியமானது.

சரி அந்த வகையில் வாஸ்து பிரகாரம் வீட்டில் எந்த திசையில் ஜன்னல் அமைக்க வேண்டும் எனப் பார்ப்போம்.

OruvanOruvan

Window vastu tips

கிழக்கு பார்த்த ஜன்னல்

கிழக்கு திசையைப் பார்த்து ஜன்னல் அமைப்பது, வீட்டிலிருக்கும் அனைத்து ராசியினருக்குமே நன்மையைக் கொடுக்கும்.

சுவாசிப்பதற்கு எவ்வாறு மூக்கு முக்கியமோ, அதேயளவு முக்கியம் வெளியிலிருந்து காற்றை வீட்டுக்குள் கொண்டுவரும் ஜன்னலும்.

வீட்டிலிருக்கும் எதிர்மறையான சக்திகளை வெளியில் அனுப்புவதில் ஜன்னலுக்கு பெரும் பங்குண்டு. அதுமட்டுமன்றி வீட்டுக்குள் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வருவது போன்ற சுப காரியங்களுக்கும் ஜன்னலின் பங்கு உண்டு.

சூரியன் உதித்ததும் உங்கள் வீட்டில் பிரவேசம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் கிழக்கு பார்த்த ஜன்னல் வைத்த வீட்டைத்தான் கட்ட வேண்டும்.

உங்களுக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்தாலும் கிழக்கு பார்த்த ஜன்னல் வைத்த வீடு உங்களை காப்பாற்றிவிடும்.

கிழக்கு பார்த்த ஜன்னல், வீட்டிலுள்ளவர்களுக்கு நோய்களை அண்ட விடாது, கடன்களை குறைக்கும்.

OruvanOruvan

Window vastu tips

தீய சக்திகளை அகற்றும்

ஒரு மனிதனின் வாழ்வில் நல்ல திசை, தீய திசை என்று இரண்டுமே உண்டு.

அவ்வாறிருக்கும்போது தீய திசை நடக்கும் காலத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் வீட்டின் நல்ல வாஸ்து உங்கள் கவலைகளை பாதியாகக் குறைத்துவிடும்.

உதாரணத்துக்கு, வெளியிலிருந்து வரும் காற்று மனிதனின் எண்ண ஓட்டங்களை கட்டுக்குள் வைக்க உதவும்.

வீட்டுக்குள் தீய சக்தி இருக்கும்பொழுது அங்கே நல்ல சக்தி தங்காது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வீட்டிலிருந்து தீய சக்தியை விரட்டுவதில் ஜன்னல்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

ஜன்னலை மூட வேண்டாம்!

வீட்டில் பார்க்கும் இடமெடல்லாம் ஜன்னல்கள் இருந்து பிரயோசனமில்லை. அந்த ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும். ஜன்னல்கள் திறந்திருந்தால்தான் சிறந்த காற்றோட்டம் மற்றும் நேர்மறை எண்ணங்களும் வீட்டுக்குள் வரமுடியும்.

OruvanOruvan

Window vastu tips