இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தங்கள் துணை மீது நம்பிக்கையே இருக்காது: உங்க ராசி எது

OruvanOruvan

Astrology

திருமண வாழ்வில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதேசமயத்தில் நம்பிக்கை குறையும்போது கணவன் - மனைவிக்கிடையில் சில பிரச்சினைகள் எழக்கூடும்.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசியில் பிறந்தவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவி தங்களை ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அந்த ராசியினர் யாரென்று பார்ப்போம்.

OruvanOruvan

Gemini

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களின் நடத்தையிலுள்ள நுட்பமான மாற்றங்களை கவனிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக இவர்கள் தங்களின் துணைகளின் சின்னச் சின்ன மாற்றங்களைக் கூட சந்தேகப்படுவார்களாம். இவர்களின் இந்த ஆளுமை நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையில் ஊசலாடும்.

OruvanOruvan

Cancer

கடகம்

விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் மதிப்பும் இவர்களின் உள்ளுணர்வில் பெரும்பாலும் சந்தேகம் நிறைந்திருக்கும். இவர்கள் குடும்பத்துடன் ஆழமான ஒரு தொடர்வை வைத்திருப்பார்கள். கடகராசிக்காரர்கள் அவர்களின் துணையின் நடத்தையில் சிறிய மாற்றத்தைக் கண்டாலும் அது அவர்களது பாதுகாப்பு உள்ளுணர்வு அவர்களை சந்தேகப்பட தூண்டும். அந்த சந்தேகம் துணையின் துரோகத்தைப் பற்றி விழிப்புடன் இருக்க வைக்கும்.

OruvanOruvan

Scorpio

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே துரோகம் பற்றிய ஆழ்ந்த பயத்தைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் தங்களின் துணையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். சில வேளைகளில் இவர்கள் தங்களின் துணை பற்றிய இரகசியங்களை தெரிந்துகொள்ளும் போது பைத்தியம் பிடித்தவர்கள் போலாகிவிடுவார்கள்.

OruvanOruvan

Capricon

மகரம்

இவர்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவார்கள். அதனால் தங்கள் துணையின் நம்பகத்தன்மையைப் பற்றி சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.