கோபத்தையும் நகைச்சுவையாக வௌிக்காட்டுவார்கள்: 'F' எழுத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்
பெயர் வைக்கும்போது அந்த பெயரின் முதலெழுத்தின் சிறப்பு பண்புகள், குணாதிசயங்கள் என்பன அந்த குறிப்பிட்ட நபருக்குள் இருக்கும். அந்த வகையில் 'F'என்ற எழுத்தின் பின்னால் உள்ள குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
எதைச் செய்தாலும் சரியாகச் செய்யும் இவர்களைச் சுற்றி நிறைய பேர் இருப்பர். மிகவும் நேர்மையாக இருப்பார்கள். எந்தவொரு விடயத்தையும் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செய்வார்கள்.
ஒரு விடயம் நடக்குமா? நடக்காதா? என்பதை முன்கூட்டியே கூறிவிடுவார்கள். மிகவும் நம்பிக்கையான நேர்மையான நபர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாகவே காணப்படும். கோபத்தை கூட நகைச்சுவையாகத்தான் வெளிப்படுத்துவார்கள். எதையும் நிதானமாக யோசித்து செய்யக்கூடியவர்கள்.
இவர்களது பலம்
நேர்மையானவர்
நண்பர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.
இயற்கையின் மீது தீவிர காதல் கொண்டவர்கள்.
எதையும் திட்டமிட்டபடியே செய்வார்கள்.
நம்பிக்கைக்குரியவர்.
எதையும் நிதானமாக சிந்திக்கக்கூடியவர்.
பொறுமையை கடைபிடிப்பவர்
சரியான நேரத்தில் வேலையை செய்து முடிப்பார்கள்
பணப் புழக்கம் இருக்கும்
பலவீனம்
நடைமுறையுடன் இணைந்து செயற்பட முடியாமல் சிரமப்படுவார்கள்.
இவர்களின் நேர்மையே இவர்களுக்கு எதிரியாக மாறும்.
'F'என்ற எழுத்து பொதுவாகவே 6 ஆம் எண்ணைக் குறிக்கும். இது நட்புணர்வு, சுகமான வாழ்க்கை என்பவற்றை குறிக்கும் எண்ணாக விளங்குகிறது.