அடிக்கடி இது கனவில் வருகின்றதா?: நீங்க சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்க

OruvanOruvan

If You See These Dreams, You Are Going To Be Rich Soon

நாம் காணும் ஒவ்வொரு கனவும் நனவாக வேண்டும் என்ற அவசியமில்லை.

கனவில் காணும் அனைத்துமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை.

ஆனால், நாம் கனவில் காணும் சில விஷயங்கள், பண வரவின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஒருவரது கனவில் என்னென்ன விஷயங்களை கண்டால், பணக்காரராக வேண்டுமென்ற கனவு நனவாகும் என்பதை பார்க்கலாம்.

OruvanOruvan

If You See These Dreams, You Are Going To Be Rich Soon

விளக்கு

கனவில் விளக்கை காண்பது உங்களைத் தேடி நிறைய பணம் வரப் போகிறது என்பதற்கான அறிகுறி என்று கனவு சாஸ்திரம் கூறுகின்றது.

காதணி

காதணிகளை அடிக்கடி கனவில் கண்டால் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே இந்த கனவு வந்த நாளில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மோதிரம்

மோதிரம் அணிவதை அடிக்கடி கனவில் கண்டால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் அருள் உங்கள் மீது உள்ளது என்று அர்த்தம்.

பாம்பு

ஒருவரது கனவில் பணம் வைக்கும் பெட்டிக்கு அருகே பாம்பைக் கண்டால், அது பணம் உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

பால்

பால் குடிப்பது போன்ற கனவு வந்தால், நீங்கள் பணக்காரர் ஆவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

தங்கம்

தங்கம் லட்சுமி தேவி இருக்கும் பொருளாகும். இந்த தங்கம் ஒருவரது கனவில் வந்தால், லட்சுமி தேவியின் அருளால் அவர் விரைவில் பணக்காரர் ஆகப் போகிறார் என்றும் அர்த்தம்.