ஈகோ அதிகம் உள்ளவர்கள் இவர்கள்: 'E' எழுத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

OruvanOruvan

'E' Letter

பெயர் வைக்கும்போது வெறுமனே அழைப்பதற்காக மட்டும் வைப்பதல்ல. அந்த பெயரின் முதலெழுத்துக்குப் பின்னால் ஒருவரது குணாதிசயங்களும் பண்புகளும் அடங்கியிருக்கும்.

அந்த வகையில் 'E' எழுத்தில் பெயர் அமைந்தவர்களின் பொதுவான குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.

இவர்களுக்கு உரையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். சுதந்திரமாக இருப்பதை மிகவும் நேசிக்கும் இவர்கள், எளிதில் அனைவரையும் நம்பி விடுவார்கள்.

OruvanOruvan

'E' Letter

மற்றவர்களுடன் பழகுவது இவர்களுக்கு மிகவும் விருப்பம். அன்பும் பாசமும் மிகவும் அவசியம் என்று நினைப்பவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவர்கள்.

எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் இவர்கள், திடீர் திடீரென மாற்றங்களை செய்வார்கள். உலகை சுற்றிவர வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டமே இருக்கும்.

OruvanOruvan

'E' Letter

இவர்களது பலம்

  • வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் கில்லாடிகள்.

  • யாரையும் காயப்படுத்த மாட்டார்கள்.

  • பேச்சுத்திறமை அதிகம்.

  • நல்ல மனநிலையில் இருப்பார்கள்.

  • எதையும் தைரியமாக முன்னின்று செய்யக்கூடியவர்கள்

  • மாற்றங்களை எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்

  • சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள்.

  • அன்பாக இருப்பார்கள்

  • உள்ளுணர்வு சரியாக இருக்கும்.

பலவீனம்

  • தன்னைச் சுற்றியே அனைவரும் இருக்கவேண்டும் என்பதைப் போல நடந்துகொள்வார்கள்.

  • இவர்களை சில நேரங்களில் நம்ப முடியாது.

  • ஈகோ அதிகம்.

  • தனிமையில் இருப்பார்கள்.

  • வெளிப்படையான மனம் இவர்களுக்கு இல்லை.

  • தன்னைச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொள்வார்கள்.

OruvanOruvan

'E' Letter

பொதுவாக 'E' எழுத்தானது புதனைக் குறிக்கும். புதன் என்பது பேச்சு, புத்திசாலித்தனம், வணிகம், எழுத்து என்பவற்றைக் குறிக்கும்.