ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்: கால்நடை வைத்தியருடன் திருமணம்

OruvanOruvan

ஏபி மற்றும் பிரிட்டானி (Abby & Brittany) எனப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம் உலகளவில் பிரபல்யமடைந்தவர்களாவர்.

இவ்வாறு ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தற்போது திருமண வாழ்க்கைக்கு பிரவேசித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, கால்நடை வைத்தியரான Josh Bowling என்பவர் இரட்டையர்களை திருமணம் செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Image 1Image 1Image 2Image 2Image 3Image 3Image 4Image 4

கடந்த 2021ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் தற்போது அதனை வெளிப்படுத்தியுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

1996ஆம் ஆண்டில் இவர்கள் oprah winfrey நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் உலகளவில் அறியப்பட்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் சுமார் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானிக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக காணப்பட்டாலும் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு மட்டுமே உள்ளன.

இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு தமது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பாடசாலையில் குழந்தைகளுக்கு கணிதம் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.