யார் இந்த செக் குடியரசின் உலக அழகி: நிஜ வாழ்க்கையின் பின்னணி

OruvanOruvan

Krystyna Pyszko

கோலாகலமாக நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிகளில் செக் குடியரசை சேர்ந்த 24 வயதான கிறிஸ்டினா பிஸ்கோவா 71ஆவது உலக அழகியாக பட்டம் சூடியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற குறித்த போட்டிகளில் 115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட கிறிஸ்டினா பிஸ்கோவாவின் வாழ்க்கை பின்னணி நாம் வியந்து பார்க்ககூடியதாக உள்ளது.

கிறிஸ்டினா உலக அழகியாக மட்டுமல்லாமல் உள்ளத்தாலும் ஒரு அழகியாகவே திகழ்கிறார்.

யார் இந்த கிறிஸ்டினா பிஸ்கோவா?

சர்வதேச மாடலாக விளங்கும் கிறிஸ்டினா ஒரு மாணவி. இவர் ஒரு தன்னார்வலராகவும் விளங்குகிறார்.

சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் எனும் இரண்டிலும் படிப்பை தொடர்ந்து வருகிறார்.

OruvanOruvan

Krystyna Pyszko

Krystyna Pyszko எனும் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

தான்சியாவில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு ஆங்கில பாடசாலையை திறந்தது கிறிஸ்டினாவின் வாழ்க்கைக்குரிய பெருமையான தருணம் என கருதப்படுகிறது.

நடைபெற்று நிறைவடைந்த உலக அழகி போட்டியில் கிறிஸ்டினாவின் பியுட்டி வித் எ பர்பஸ் (Beauty with a purpose) திட்டமானது தான்சானியாவில் குழந்தைகளுக்கான முன்னேற்ற பணிகளில் கவனங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

தான்சானியாவில் ஒரு பாடசாலையைத் திறந்து குழந்தைகளுக்கான தரமான கல்வியை மேம்படுத்த தன்னார்வலராக முன்வந்துள்ளார்.

கல்வி , கலை இவை இரண்டுமே இவரது ஆர்வமாக இருந்து வரும் நிலையில் செக் குடியரசிலும் தனது அறக் கட்டளையை திறக்க தீர்மானித்துள்ளார்.

இவரது இந்தப் பணி குழந்தைகளுக்கு மட்டுமல்லாது வயதானவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு பல கல்வித் திட்டங்களை வழங்குவதிலும் தொடர்ந்து வருகிறது.