மூளையில் கட்டி! அஜித்துக்கு 4 மணிநேர அறுவைசிகிச்சை?: தல ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி!

OruvanOruvan

Actor Ajith Kumar in hospital

நடிகர் அஜித் குமார் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் அஜித்குமார் சென்னை தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி நேற்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், வழக்கமான பரிசோதனைகளுக்காகவே அஜித்குமார் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.

'விடாமுயற்சி'

கோடான கோடி ரசிகர்களை கொண்ட அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் த்ரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு துனிஷியாவில் நடைபெற்று வந்தது. ஆனால், வானிலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின் தொடங்கப்பட்டது.

OruvanOruvan

Actor Ajith Kumar

மூளையில் லேசான கட்டி

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரின் மூளையில் லேசான கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அஜித் சம்மதித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தான் அப்போலோ வைத்தியசாயில் வைத்தியசாலை பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு கட்டியானது அகற்றப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து இரண்டு வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டு அஜித் குமாருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

OruvanOruvan

Actor Ajith Kumar

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை

குறித்த அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதன் நம்பகத்தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. இப்படி அஜித்தின் உடல்நிலை குறித்து நேற்றில் இருந்து இணையத்தில் செய்தி பரவிக்கொண்டு இருக்கும்போது, அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ்சந்திரா இதுகுறித்து அமைதியாக இருப்பது அஜித் ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

OruvanOruvan

Actor Ajith Kumar