“அவளை மீண்டும் அழைத்ததால் மகனை கொலை செய்தேன்“: மருமகளுடனான தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்

OruvanOruvan

Improper relationship

இம்பத்தலே - வேகந்த பகுதியில் தந்தையொருவர் தனது மகனை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மகனின் மனைவியுடனான தகாத உறவின் நிமித்தமே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

OruvanOruvan

Improper relationship

கடந்த 10 வருடங்களாக இவர்களிடையேயான தொடர்பு நீடித்துள்ளது.இவர் தற்போது அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எனக்கும் என் மருமகளுக்கும் இடையில் நீண்டநாள் தொடர்பு இருக்கின்றது. ஒரு நாள் நான் அவளுடன் உறவு கொள்ளும்போது என் மகன் பார்த்துவிட்டான். அன்றிலிருந்து அவன் மனைவியுடன் வாழவில்லை.

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவன் இவளிடமிருந்து விலகி சென்றுவிட்டான். பின்னர் மகனின் புதிய மனைவியும் வெளிநாடு சென்றுவிட்டார்.

அவன் விட்டுச்சென்ற நாளிலிருந்து அன்றிலிருந்து நான் தான் இவளை பார்த்துக்கொள்கின்றேன். மேலும் எங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது.

எனது மகனுக்கும் ஒரு பிள்ளை உள்ளது...

ஆனாலும், எனது மகன் என் மனைவியை (மருமகளை) விடுவதாக இல்லை. புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளேன் நீ வா என்று அழைத்துள்ளார்.

என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை... மோதரை கோவிலுக்கு சென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு அவன் எங்கள் வாழ்க்கையில் வரக்கூடாது... அவனின் இரண்டாவது மனைவி வெளிநாட்டிலிருந்து வந்துவிடவேண்டும் என்று தேங்காயும் உடைத்தேன்.

மகனை கொலை செய்த நாளன்று, நான் மது போத்தல்கள் சிலவற்றை வாங்கி வந்தேன்... அப்பொழுது எனது மகனின் சக நண்பர்களும் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர். அப்பொழுது அவர்கள் ஏற்கனவே மது அருந்திக்கொண்டிருந்தார்கள்.. அப்பொழுது நானும் அவர்களுடன் செட் ஆகிவிட்டேன்...

அப்பொழுது அனைவருக்கும் போதை அதிகமாகி, மயக்கநிலைக்கு சென்றுவிட்டனர். அப்போது மகனை பாய் விரித்து படுக்க சொன்னேன். நண்பர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இதுதான் அருமையான சமயம் என எண்ணி... அங்கிருந்த புதிய மன்னா(கத்தி)வால் கழுத்தை அறுத்தேன்... "

OruvanOruvan

Improper relationship

கத்தி தொடர்பில் பொலிஸார் விசாரித்ததில்,

குறித்த கத்தியை தான் 1800ரூபாய் கொடுத்து வெல்லம்பிட்டியவிலிருந்து வாங்கிவந்ததாகவும் காதலர் தினத்தன்று, என் மனைவி இந்த வீட்டிற்கு வருவாள்.. அவளுக்கு ஒரு முக்கிய வேலை கொடுக்கவுள்ளேன்.. அதற்காக தான் இந்த கத்தியை எடுத்துவந்தேன் என என் மகன் என்னிடம் கூறினார்.

மகனை கொலை செய்த பின்பு ஒன்றுமே தெரியாதது போல் நுகேகொடவில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டேன்” என சிறிது கூட கலக்கமின்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுமார் 11 வருடங்களுக்கு முன் குறித்த தம்பதியினருக்கு(மகனுக்கும் மருமகளுக்கும்) திருமணம் முடிகின்றது. இருந்தபோதிலும் இவர்கள் இருவரும் கணவன், மனைவி போல் அன்றி சண்டைகாரர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தந்தை மருமகளை மனைவியாக்கி கொண்டார். இதனால் இவர்கள் இருவரும் கடந்த 10 வருடகாலமாக தகாத உறவில் வாழ்ந்துள்ளனர்.

கொலையுடன் தந்தைக்கு தொடர்பு இருக்குமா என விசாரித்ததிலேயே தந்தை கைது செய்யப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாவும் முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.