மஞ்சள் நிற குடையால் மாட்டிக்கொண்ட விகாராதிபதி: தலைமறைவாகிவிட்டதாக தகவல்!

OruvanOruvan

A vicar with a yellow umbrella

விகாரையொன்றின் தலைமை பிக்கு ஒருவர், காவியுடை களைந்து, சாதாரண டீசேர்ட் - பேண்ட் உடையணிந்து இளம் பெண்கள் மூவரு​டன் சுற்றுலா சென்றுள்ள சம்பவமொன்று தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், அவரை ஊரைவிட்டு விரட்டியடித்துள்ள சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அளுத்கம, வெலிப்பென்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உள்நுழையும் வீதிக்கு அண்மையில் உள்ள கிராமமொன்றின் விகாரையிலேயே இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அவ்வாறு சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் வந்து சுற்றித்திரியும் நபர், தங்களுடைய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிரதான பிக்கு என்பதை, அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அடையாளம் கண்டுக்கொண்டனர்.

பின்னர் தங்களின் கையடக்கதொலைபேசிகளில் அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து, அந்த காணொளியும் இணையத்தில் வைரலாகிவிடவே, ஊராருக்கும் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை​ விகாரைக்குத் திரும்பிய அந்த பிக்கு, விகாரையை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டார் என்று ​பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிக்கு, சிவில் உடையில் கதிர்காமத்துக்கு மூன்று பெண்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் கதிர்காமத்துக்கு ஏற்கெனவே சுற்றுலா சென்றிருந்தனர்.

ஆணொருவருடன் மூன்று பெண்கள் கைகளை கோர்த்துக்கொண்டு பயணித்தால், யாருக்குத்தான் சந்தேகம் வராது, அங்குச் சென்றிருந்தவர்கள் பலரும் அந்த நால்வரையும் உற்றுப்பார்த்துள்ளனர்.

அதேபோல, வெலிப்பென்ன பிரதேசத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் அவதானித்துள்ளனர்.

அப்போதுதான், சிவில் உடையில் இருக்கும் நபர், தங்களுடைய கிராமத்தை சேர்ந்த விகாரையின் பிக்கு என்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்தே அவர்கள் புகைப்படம் காணொளி என்பவற்றை எடுத்து பகிர்ந்துள்ளனர்.

அத்துடன், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நால்வரையும் கடுமையாக ​எச்சரித்தனர். அதனையடுத்து அந்த இடத்தைவிட்டு தப்பினோம் பிழைத்தோமென அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

“யுவதிகள் மூவரும் எங்குச் சென்றுவிட்டனர் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. “

கதிர்காமத்தில் நால்வரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு பயணித்துள்ளனர் என்பதுடன், சிவில் உடையில் இருந்த தேரர், தனது கையில் மஞ்சள் நிறத்திலான குடையை வைத்திருந்தமையால் மாட்டிக்கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேரர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கான காரணம் என்ன?

கடந்த சில வருடங்களாகவே தேரர்களின் தவறான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களை ஆட்கொண்டுள்ளன.

இவர்கள் சிறியவர்களாக இருக்கும் பொழுது தங்களின் வீடுகளில் பெற்றோர்களால் பலவந்தமாக தள்ளப்படுகின்றமையும் பிரதான காரணமாக இருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவுசெய்யப்படுகின்றன.

மேலும், தற்போதைய தேரர்களுக்கு அதிகமான பணவசதி இருப்பதாகவும் அண்மையில் கருத்துக்கள் பகிரப்பட்டது. அவர்களிடம் சேரும் பணத்தை என்ன செய்வது என அறியாது பெண்களிடம் கொடுத்து தவறான முறையில் அதை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

OruvanOruvan

துறவரம் பூண்டவர்கள் தொடர்பில் மனநல வைத்தியர்கள் கூறுவது என்ன?

சிறுவயது முதலே அவர்கள் துறவரத்துக்கு தள்ளப்படுவதால், வெளியுலக வாழ்க்கையை மிகவும் இழப்பது போல் உணர்கிறார்கள்.

இதனால் பதின்மவயது போது, இவர்கள் எதிர்பாலினத்தவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது. எவ்வளவு தான் உணர்வுகளை கட்டுப்படுத்தினாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களையும் மீறி சில தவறான விடயங்களை செய்துவிடுகின்றனர்.

இதற்கு முற்றிலும் அவர்களை குறை கூறிவிட முடியாது.

சிலவேளைகளில், தற்போதைய கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளமையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தவறான வழிக்கு செல்ல வழிவகுக்கின்றது.

உணர்வுகளை கட்டுப்படுத்தல் என்பது மனிதர்களுக்கு மிகவும் சவாலான விடயமாகும். குறிப்பாக பாலுணர்வு என்பது மனிதர் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான உணர்வு. அதை கட்டுப்படுத்து சிரமமாக இருந்தாலும் அதற்கான மனநிலையை கொண்டு வருவது அவசியமாகும்.

பௌத்த துறவரத்தை சிறுவயதில் பூணுவதைவிட பதின்ம வயதுக்கு மேல் எலக வாழ்க்கை பற்றி முழுமையாக அறிந்து கொள்வது தான் துறவரத்துக்கும் சிறந்தது.

மற்றும் அவர்களும் அதற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். உணர்வுகளை கட்டுப்படுத்த கூடிய பக்கவம் ஏற்படும்.

கௌதம புத்தர் கூட திருமணத்துக்கு பின்னரே துறவரம் கொண்டார் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். அவர் எப்போதும் சிறுவயதில் துறவரம் பூணுமாறு போதித்தில்லை.

இலங்கை போன்ற பௌத்தர்கள் வாழும் நாடுகளில் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், தமது பிள்ளைகளை சிறந்த உணவு, படிப்பு கிடைக்கும் என்ற காரணத்துக்காக சிறுவயதிலேயே துறவர வாழ்க்கைக்க அனுப்புகின்றனர்.

இதன்போது அங்கு ஏற்கனவே இருக்கும் மூத்த தேரர்கள் இளம் பிக்குகளை பாலியல் ரீதியான துஷ்ப்பிரயோகத்துக்கு ஆளாக்குகின்றார்கள். (இவ்வாறான சந்தர்ப்பங்கள் இலங்கயைில் தற்போது அதிகமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. )

இவ்வாறான சம்பவங்களால் சிறந்த சமய விழுமியங்கள் மீறப்படுகின்றது. சமய நம்பிக்கை இல்லாமல் போகின்றது. துறவரத்தை பின்பற்ற ஏனையோரை தூண்டுவதில்லை. மாறாக விமர்சனங்களே எழுகின்றன...

மேலும், அதிகமான இளம் பிக்குகளின் தற்கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.