மோசடி செய்தவரின் காதலி, புதுமுக நடிகையாம்?: பிரமிட் திட்டம் மூலம் ஊரை ஏமாற்றி 500 கோடி ரூபாவை மோசடி செய்த ஜோடி!

OruvanOruvan

கோடிக்கணக்கில் பணமோசடி செய்து ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்த இருவரின் கதை நேற்றைய தினம் அம்பலமாகியிருந்தது.

கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி, 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரொருவரும் அவரது இரகசியக் காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் பின்னணி...

'தரிந்து வீரசேகர' என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரின் இரகசிய காதலி என அழைக்கப்படுபவர் ஒரு புதுமுக நடிகை எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

OruvanOruvan

2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் "ட்ரெட்வின்" என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இதற்காக அவர்கள் பேஸ்புக் கணக்கையும் திறந்து அதனூடாக பலரை ஏமாற்றியமையும் தெரியவந்துள்ளது.

OruvanOruvan

Tredwin Facebook page

குறித்த பேஸ்புக் பக்கம் தற்பொழுதும் செயற்பாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அது குறித்து மக்களை கவனமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இரகசியகாதலியின் பெயரில் 80 இலட்ச ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை!!

குறித்த மோசடிகாரர், மக்களை ஏமாற்றி கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது இரகசிய காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்த பணத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த நபரின் இரகசிய காதலியின் பெயரில் 80 இலட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

OruvanOruvan

இரகசியக் காதலியும் கைது

அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது இரகசியக் காதலியும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய நபரும் அவரது காதலியும் நேற்று பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

OruvanOruvan