ஜான்வி கபூருடன் ஜோடி சேரும் சூர்யா: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

OruvanOruvan

Surya new movie

நடிகர் சூர்யாவின் அடுத்தப்படத்தில் ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது.

'கங்குவா' திரைப்படத்தினை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

OruvanOruvan

Surya new movie

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படம் பற்றி தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பொலிவுட் இயக்குநர் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் மகாபாரத படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

இந்த திரைப்படம் ரூபாய் 500 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும், இத் திரைப்படத்தின் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை, இது வதந்தியாகவும் இருக்கலாம்.

மேலும், நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கருடன் கூட்டணி அமைப்பதாகவும் செய்திகள் பரவியது. இந்த தகவலும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.