நான் ஈழத்து பெண்! சரிகமப மேடையில் கதறி அழுத சாரங்கா: 7 வயதில் இருந்து புலம் பெயர் உறவுகளுக்காக செய்யும் காரியம்

OruvanOruvan

Saregamapa Senior Season 4 Dedication Round

சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் Dedication Round நடைபெற்றது.

தங்களுக்கு பிடித்த உறவுகளுக்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் பாடல் பாடினார்கள்.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற சாரங்கா ஒட்டுமொத்த புலம் பெயர் தமிழர்களுக்காகவும் மேடையில் பாடினார்.

அவர் பாடி முடிந்த பிறகு தனது உறவுகளை நினைத்து மேடையில் கதறி அழுதார்.

அது மட்டும் இன்றி, சுவிஸர்லாந்தில் வாழ்ந்தாலும் நான் ஈழத்து பெண் என்று கூறுவதில் தான் மகிழ்ச்சி எனவும், நான் பாடுவது ஈழத்து மக்களுக்கு தான் எனவும் சாரங்கா குறிப்பிட்டார்.

மேலும், வீடியோ காலில் அவரின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

இதன்போது ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போதும் உறவுகளுக்காக எழுச்சி பாடல் பாடுவதை சாரங்கா 7 வயதில் இருந்து வளக்கமாக வைத்திருப்பதாக அவரின் தந்தை கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.