பழங்கால புகைப்படங்களில் மக்கள் சிரிக்காததற்கு காரணம் என்ன?: கேட்டால் அசந்து போய்விடுவீர்கள்

OruvanOruvan

Peoples not smiled in old photos

ஒரு நாளைக்கு குறைந்தது 10 செல்ஃபிக்கள் எடுத்தால்தான் அந்த நாளே நன்றாக இருக்கும். என அனைவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர்.

எடுக்கும் அனைத்து புகைப்படங்களிலும் ஏதாவது ஒன்றாவது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக விதவிதமான கோணத்தில் முகத்தை மாற்றி புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஆனால், பண்டைய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் யாருமே சிரித்திரிக்க மாட்டார்கள். இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

டாகுரோடைப்ஸ் எனப்படும் ஆரம்பகால புகைப்படங்களை எடுப்பதற்கு குறைந்தது பல நிமிடங்கள் தேவைப்பட்டது.

புகைப்படம் மங்கலாக வருவதைத் தவிர்ப்பதற்காக புகைப்படத்தில் இருப்பவர்கள் முற்றிலும் அமைதியாகவும் அதிக நேரம் முகத்தை சிரித்தபடி வைத்திருப்பதும் அவசியமாகியது. எனவே அவ்வளவு நேரம் சிரித்தபடி இருப்பது கடினமான ஒன்றாக இருந்தது.

OruvanOruvan

Peoples not smiled in old photos

ஓவிய மரபின் படி ஆரம்பகால புகைப்படங்கள் மக்களின் நடுநிலை வெளிப்பாடுகளை பிரதிபலிக்கின்றன. இது புகைப்படத்திலும் தாக்கத்தை செலுத்துகின்றன.

மங்கலான புகைப்படத்தை தவிர்க்க எந்தவொரு அசைவோ, அல்லது இயற்கையான புன்னகையையோ வைத்திருப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. இதனால் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்க வருபவர்களை அசையாமல் இருக்கும்படி வலியுறுத்தினர்.

ஆரம்பக் காலத்தில் புகைப்படங்களில் புன்னகைப்பது கண்ணியமற்றதாக அல்லது பொருத்தமற்றதாக இருந்தது.

அதுமட்டுமில்லாமல் ஆரம்பக் காலங்களில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால், மக்கள் தங்களது சிறந்த உடையை அணிந்துகொண்டு, புகைப்படக் கலைஞரின் ஸ்டூடியோவுக்குச் சென்று அதிக நேரம் காத்திருந்து போஸ் கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் புகைப்படத்துக்காக அதிக காலம் காத்திருக்க வேண்டியும் இருந்தது.