உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் கையெழுத்து: நீங்கள் எழுதும் முறை என்ன?

OruvanOruvan

Hand writing

ஒருவரின் கையெழுத்தில் அவரது தலையெழுத்து அமைந்துள்ளது என கூறக் கேட்டிருப்போம். கையெழுத்தில் ஒருவரது உடல், மனம், ஆன்மாவின் செயல்பாடுகள் போன்றவை வெளிப்படும்.

மக்கள் தமது எழுத்துக்களை எந்த முறையில் எழுதுகிறார்கள் என்பதைக் கொண்டே அவர்களின் ஆளுமையைக் கூறிவிடலாம். அந்த வகையில்,

சாய்வான கையெழுத்து

நீங்கள் எழுதும்போது உங்கள் கையெழுத்து வலது பக்கம் சாய்ந்தால், நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள் என்று அர்த்தம். அதே இடது பக்கம் சாய்ந்தால், நீங்கள் மனச்சோர்வடைந்தவராகவோ அல்லது கவலையாகவோ உணர்கிறீர்கள் என அர்த்தம்.

OruvanOruvan

Hand writing

எழுத்தின் அளவு

உங்களது எழுத்துக்கள் பெரியதாக இருந்தால், நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களைச் சார்ந்தவராகவோ அல்லது மற்றவர்களை அனுசரித்து செல்பவராகவோ இருக்கலாம். குறிப்பாக மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பீர்கள்.

இதுவே உங்கள் கையெழுத்து சிறியதாக இருந்தால், உங்கள் சொந்த இடத்தில் இருப்பதை விரும்பும் ஒரு உள்முக சிந்தனையாளராக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி நீங்கள் சிறந்த ஆற்றல் மற்றும் அனைத்திலும் கவனம் செலுத்துபவராக இருப்பீர்கள்.

எழுத்துக்களிடையே இருக்கும் இடைவெளி

நீங்கள் எழுதும் எழுத்துக்களுக்கு இடையில், குறைவான இடைவெளி இருப்பின் லொஜிக்காக சிந்திப்பவர்கள் மற்றும் புள்ளி விபரங்கள், உண்மைகளின் அடிப்படையில் மிகவும் கவனமாக முடிவுகளை எடுப்பவர்கள் என்று அர்த்தப்படும். அதுவே எழுத்துக்களுக்கு இடையில் போதுமான இடைவெளி இருந்தால் அது உங்களது அறிவுத்திறனை குறிக்கும்.

OruvanOruvan

Hand writing