மண்டியிட்டு காதலைக்கூறும் பழக்கம் எப்போது ஆரம்பமானது?: தெரிந்துகொள்ளுங்கள்

OruvanOruvan

Proposing Style

ஒரு பெண்ணிடம் தன் காதலை பகிர்ந்துகொள்ளும் ஆண், மண்டியிட்டு புரபோஸ் செய்வது ஏன்? என என்றாவது நாம் சிந்தித்திருப்போமா?

இந்த நடைமுறையானது பல நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

மோதிரம் மாற்றிக்கொள்வது

OruvanOruvan

Ring exchanging

திருமணங்களின்போது மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொள்வது, அவர்கள் உறுதிமொழி எடுப்பதற்கான அடையாளமாக உள்ளது.

1470களில் பணக்காரர்களிடையே வைர மோதிரங்களை மாற்றிக்கொள்ளும் பாரம்பரியம் இருந்து வந்தது.

முட்டியிட்டு காதலை வெளிப்படுத்தல்

காதலிக்கோ அல்லது காதலனுக்கோ முட்டியிட்டு புரபோஸ் செய்வது துணையின் மீதான பக்தியை வெளிக்காட்டுகிறது. ஒரு சாரார் இதனை ஏற்றுக்கொண்டாலும் இன்னொரு சாரார் இந்த நடைமுறையை அடிமைத்தனமாக பார்த்தார்கள். ஆனாலும் 19ஆம் நூற்றண்டில் திருமண முன்மொழிவுக்கு இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

லீப் ஆண்டு புரபோஸல்

OruvanOruvan

Girl proposing to boy

இந்த லீப் ஆண்டு புரபோஸல் என்பது, ஆண், பெண் என இருவரும் திருமண முன்மொழிவுகளில் பங்குபெற வேண்டும்.

இருவரின் ஒப்புதலும் திருமணத்துக்கு அவசியமாக பார்க்கப்பட்டது.

பெப்ரவரி 29 இன் லீப் வருட புரபோஸல் பெரிய ஒரு விடயமாக பார்க்கப்பட்டது.

லீப் ஆண்டு புரபோஸல் என்பது, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை, பெப்ரவரி 29ஆம் திகதியன்று பெண்கள் தங்களது ஆண் துணையிடம் புரபோஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த பாரம்பரியமானது 5ஆம் நூற்றாண்டின் அயர்லாந்திலிருந்து ஆரம்பமானது.

இதன்பின்னர் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகளிலும் இது பிரபலமடைய, 1800களின் முற்பகுதியில் அமெரிக்கா பெண்கள் தங்கள் துணையை தாமாகவே தேர்ந்தெடுக்க முன் வந்தனர்.

1288ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து ராணி மார்கரெட் இந்த லீப் இயர் புரபோஸலை ஒரு சட்டமாக இயற்றியதாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்களிடம் முட்டியிட்டு புரபோஸ் செய்யலாம் என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.