தண்ணீர் குடிக்க போராடும் ஒட்டகச் சிவிங்கி: வைரலாகும் காணொளி

OruvanOruvan

Camel

ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு உடலமைப்பு. சில உடல் பாகங்கள் அவற்றுக்கு உதவியாகவும் சில உடல் பாகங்கள் அவற்றின் வேலைகளுக்கு தடையாகவும் அமைந்துவிடுகின்றன.

அந்த வகையில், காணொளியொன்றில் ஒட்டகச் சிவிங்கியொன்று தண்ணீர் குடிக்க வருகிறது. ஆனால், அதன் உயரத்துக்கு தண்ணீரை குனிந்து குடிக்க முடியவில்லை.

அதற்காக தனது உடலை வளைத்து, முன் கால்களை நீட்டி கழுத்தை குனிந்து தண்ணீரை குடிக்க பல முயற்சிகளையும் செய்கிறது.

நடுநடுவே எதிரிகள் தாக்க வருகிறார்களா எனவும் பார்த்துக் கொள்கிறது.

கடைசியாக பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்துகொண்டு தனது பெரிய உடலை வளைத்து, மெதுவாக தண்ணீர் குடிக்கிறது.

தண்ணீர் குடிப்பதற்கே இவ்வளவு போராடும் மிகவும் அழகான விலங்கினம். ஆனால், இன்னும் பத்து வருடங்களில் முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளது.