இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் ஈழத்தமிழ் பெண்!: இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

OruvanOruvan

இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் என்ற யுவதி இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி தற்பொழுது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அமுர்தா சுரேன்குமார் களமிறங்கியிருந்தார்.

பந்து வீச்சில் மூன்று ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை கொடுத்திருந்ததுடன் துடுப்பாட்டத்தில் ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.

OruvanOruvan

England national cricket team

அமுர்தாவின் தந்தையான சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் , கிரிக்கெட் போட்டிகளில் கல்லூரியின் சார்பில் சாதனைகளை படைத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், அமுர்தா சுரேன்குமார் இலங்கைக்கு எதிராக விளையாடிய போட்டியின் காணொளிகளும் இணையத்தில் லைரலாகியுள்ளது.