ரூபாய் 40 கோடிக்கு ஏலம் போன பசு மாடு: அப்படி என்ன ஸ்பெஷல்
பொதுவாக ஆடு, மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மாடுகளின் விலை சுமார் ரூபாய் 50,000 முதல் 1 இலட்சம் வரையில் இருக்கலாம்.
ஆனால், சமீபத்தில் பிரேசிலில் நடந்த ஏலத்தில் ஆந்திராவில் நெல்லூரைச் சேர்ந்த Viatina-19 FIV எனும் ஒரு பசு மாடு ரூபாய் 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த பசுமாட்டில் அப்படியென்ன சிறப்பு உள்ளன?
அறிவியல் ரீதியாக இந்த பசுமாட்டை Bos Indicus என அழைக்கின்றனர். இது இந்தியாவின் ஓங்கோல் கால்நடைகளின் வம்சாவளியைச் சேர்ந்தது. இந்த வகை மாடுகள் வலிமைக்கு பெயர் போனது.
அதுமட்டுமின்றி சூழலுக்கு அமைய தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தவை இந்த மாடுகள். இவற்றுக்கு எந்தவொரு தொற்றும் ஏற்படாது.
கடந்த 1868ஆம் ஆண்டு கப்பல் மூலம் இந்த மாடுகள் முதன் முறையாக பிரேசிலுக்கு அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1960களில் இன்னும் பல மாடுகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. இதிலிருந்து இந்த மாடுகள் பிரபலமடையத் தொடங்கின.