பாம்புகளுக்கு நான்கு கால்கள் இருந்ததா?: ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை

OruvanOruvan

Snake

ஒரு ஆராய்ச்சியில் முன்பொரு காலத்தில் நான்கு கால்களைக் கொண்ட பாம்புகள் இருந்தாகவும் அவை எப்படி மறைந்தன என்பது குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் உலகில் பாம்புகள் முழுவதுமாக அழிந்துவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பாம்புகள் ஊர்ந்து சென்றதாக நம்பப்பட்டாலும் அவை இரையைப் பிடிப்பதற்காக தங்கள் கால்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் இதன் பாதங்கள் சிறியதாகவும் மென்மையாகவும் இருந்துள்ளன எனவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளன.

பின்னர் பாம்புகளின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக அதன் கால்கள் மறைந்துவிட்டன எனவும் கூறப்படுகிறது.

டைனோசர்கள் அழிந்தாலும் பாம்புகள் இன்னும் பூமியில் உள்ளன.

இந்த பாம்புகள் பூமியில் இல்லாவிட்டால் என்ன ஆகும்?

இந்த பாம்புகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனிதர்களுக்கு உதவுகிறது. பாம்புகள் இல்லாவிட்டால் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். கழுகுகளின் எண்ணிக்கை குறையும். தவளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூச்சிகளின் எண்ணிக்கை குறையும்.

அதுமட்டுமின்றி சில உயிர் காக்கும் மருந்துகள் பாம்பின் விஷத்திலிருந்து பெறப்படுகின்றன. அதனால் பாம்புகள் உலகில் அழியாமல் இருப்பது அவசியம்.