இந்த கடற்கரையின் கூழாங்கற்களை எடுக்காதீர்கள்: இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்படும்

OruvanOruvan

Taking stones in Kenari island beach

கடற்கரைகள் என்று கூறினாலே அழகுதான். இந்த அழகை இரசிப்பதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்கள் கடற்கரைக்கு வந்து செல்வர்.

இவ்வாறு கடற்கரைக்குச் செல்லும் அங்குள்ள கூழாங்கற்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

ஆனால், கேனரி தீவுகளிலுள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளிலுள்ள கூழாங்கற்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றால், ரூபாய் 2 இலட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

வருடந்தோறும் கோடை காலத்தில் இங்கு சுற்றுலாவுக்கு வரும் மக்கள், இந்த கடற்கரையிலிருந்து சுமார் 1 தொன் கூழாங் கற்களை எடுத்துச் செல்வதால் அந்த தீவில் கூழாங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்கரையின் அழகு பாதிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.