ஒரு மணிநேர கட்டிப்பிடி வைத்தியம்: ஒரு நபரிடம் ரூபாய் 7400 வசூலிக்கும் பெண்

OruvanOruvan

Professional hugger

இன்றைய சூழலில் பணத்தை நோக்கி ஓடும் நாம், மன அமைதி, ஆறுதல் போன்றவற்றை இழந்து வருகிறோம்.

இவ்வாறு நாம் மன நிம்மதியில்லாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் எவரேனும் எம்மை ஆறுதலாக அணைத்துக்கொண்டால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.

அந்த செயலை ஒரு பணியாகவே செய்து வருகிறார் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் 42 வயதான அனிகோ ரோஸ்.

அனிகோ ரோஸ் ஒரு புரொஃபஷனல் ஹக்கர் (Professional hugger) ஆவார். இவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த பணியை செய்து வருகிறார்.

அனிகோவின் தொழில் 'அரவணைப்பு' என கூறப்படுகிறது.

இந்த அரவணைப்பானது, ஒரு நபருக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதனாலேயே அனிகோவின் வாசலில் வாடிக்கையாளர்கள் குவிகின்றனர்.

இந்த பணிக்காக ஒருவரிடம் ஒரு மணி நேரத்துக்கு 70 பவுண்டுகள் அதாவது, சுமார் ரூபாய். 7400 ரூபாயை வசூலிக்கிறார்.

அனிகோவிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் 20 முதல் 65 வயதான நபர்களே அதிகம் என கூறுகிறார்.