மனித மாமிசம் உண்ணும் மனிதர்கள்: இந்த நாடுகளில் இன்னும் வாழ்கின்றனர்

OruvanOruvan

Human eats human deadbody

மனிதன் விலங்குகளைக் கொன்று உண்ணுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், நர மாமிசம் சாப்பிடுவது என்பது மனித குலத்துக்கு எதிரான ஒரு செயலாகும்.

நாகரீகம் நன்றாக வளர்ந்துவிட்டாலும் கூட தற்போதும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் சில நாடுகளில் இருக்கத்தான் செய்கின்றன.

பப்புவா நியூகினியா

பப்புவா நியூகினியாவில் ந்தீராம் கபூர் ஆற்றங்கரையில் வாழும் கொரோவாய் என்ற பழங்குடியினர் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் சடலத்தை சாப்பிடுவார்கள். இதை அவர்களின் கடமையாக கருதுகிறார்கள்.

நைஹே குகைள், சிகடோகா, பிஜி

இந்த தீவிலுள்ளவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்கள். இதன் காரணமாக இந்த தீவை 'நரமாமிச தீவு' என அழைப்பார்கள்.

கம்போடியா

கெமர் ரூஜ் கிளர்ச்சியில் போராடிய கம்போடிய வீரர்கள், தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மனித கல்லீரலை சாப்பிடுவது அவர்களின் பலத்தையும் தைரியத்தையும் பறைசாற்றுவதாக இருக்கிறது.

லைபீரியா

முதல் லைபீரிய உள்நாட்டுப் போருக்குப் பின்னர் லைபீரியாவில் நர மாமிசம் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தது.

மேற்கு ஆபிரிக்கா

'சிறுத்தை சமூகம்' எனக் குறிப்பிடப்படும் ஒரு குழுவினர், சிறுத்தைகளின் நகங்கள், பற்கள் என்பவற்றை பயன்படுத்தி பயணிகளைத் தாக்கி பின் சாப்பிடுவார்கள்.