2024ஆம் ஆண்டில் அபூர்வ சூரிய கிரகணம்: 54 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த அமெரிக்கா

OruvanOruvan

Solar Eclipse 2024

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் தொடர்பில் 54 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கும் தகவல் இணையத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, மதக் கண்ணோட்டத்தில் கிரகண நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், அறிவியல் பார்வையில், கிரகண நிகழ்வு ஒரு வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் கிரகணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதி ஏற்பட்டது. இருப்பினும் இந்த கிரகணம் ஒரு சந்திர கிரகணம்.

மத மற்றும் அறிவியல் நம்பிக்கைகளின்படி, கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும் இந்த நாளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டிருந்தது.

OruvanOruvan

Solar Eclipse 2024

முதல் சூரிய கிரகணம்

2024 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியன்று நிகழுவுள்ளதுடன் இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி 1:25 மணி வரை நீடிக்கும் என்றும் வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இதன்போது பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருள் அடைவது மட்டுமல்லாமல் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்.

OruvanOruvan

Ohio Newspaper's 54-Year-Old Solar Eclipse Prediction For 2024 Is Spot On

பழமை வாய்ந்த செய்தித்தாளில் வெளியான செய்தி

அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளில் இவ்வாண்டிற்கான சூரிய கிரகணம் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தித்தாளில் ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 1970 ஆம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் கோட்டில் காட்சியளிக்கும் என்றும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.